தேனி சுக்குவாடன்பட்டி பகுதியில் அமைந்துள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் இன்று வேளாண் இயந்திரங்கள் குறித்த மாவட்ட அளவிலான முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு வேளாண் துறையினர் ட்ரோன் மூலம் பூச்சி மருந்து தெளிப்பதால் ஏற்படும் செலவினங்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியில் மாவட்டத்தில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.