மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேசியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவையொட்டி பேராவூரணியில் அமைதி ஊர்வலம், இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
பேராவூரணி பயணியர் மாளிகையில் இருந்து அமைதி ஊர்வலம், மூத்த நிர்வாகி வீ. கருப்பையா, சிபிஎம் சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் ஆர். எஸ். வேலுச்சாமி, பேராவூரணி ஒன்றியச் செயலாளர் வே. ரெங்கசாமி ஆகியோர் தலைமையில் தொடங்கி, வேதாந்தம் அரங்கில் நிறைவடைந்தது. தொடர்ந்து இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
இதில், பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா. அசோக்குமார், திமுக ஒன்றியச் செயலாளர் க. அன்பழகன், சிபிஐ மாநிலக்குழு உறுப்பினர் பா. பாலசுந்தரம், வீரமணி, திராவிடர் கழகம் இரா. நீலகண்டன், காங்கிரஸ் கட்சி கே. வி. கிருஷ்ணன், சேக் இப்ராஹிம்ஷா, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில நிர்வாகி மோட்ச. குணவழகன், திராவிடர் விடுதலைக் கழகம் மாவட்ட அமைப்பாளர் சித. திருவேங்கடம், மதிமுக வ. பாலசுப்பிரமணியன், குமார், தேமுதிக எஸ். ஆர். சீனிவாசன், மனித நேய ஜனநாயகக் கட்சி மாநில நிர்வாகி அப்துல் சலாம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.