தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்யக் கோரி சாலை மறியல்

69பார்த்தது
பேராவூரணி அருகே உள்ள சோழகனார்வயல் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 28) இவர் கடந்த 4 ஆம் தேதி வெளியூர் சென்று விட்டு தனது நண்பரான குகநாதன் என்பவர் உடன் பைக்கில் தனது ஊருக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது கழனிவாசல் என்ற ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், மதுபோதையில் வழிவிடாமல், சாலையில் இங்கும் அங்குமாக வாகனத்தை ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாண்டியன் தனக்கு வழி விடுமாறும், ஓரமாகச் செல்லுமாறும் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த சிவா, விக்னேஷ், கவுதம் கோபால் உள்ளிட்ட நான்கு பேர் பாண்டியனை கடத்திச் சென்று, கொரட்டூர் என்ற இடத்தில் வைத்து கையாளும், பீர்பாட்டில், ஆயுதங்களாலும் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தாக்குதலில் காயமடைந்த பாண்டியன் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், தாக்குதலில்
ஈடுபட்ட நான்கு பேரும் வெளியில் சுற்றித் திரிவதாகவும், காவல்துறையினர் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, சம்பந்தப்பட்ட நான்கு பேரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி காவல்துறையை கண்டித்து
சேர்ந்தவர்கள் பேராவூரணி அண்ணா சிலை அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்ளிட்ட 30 பேரை கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி