சேதுபாவாசத்திரம்: 287 மதுபாட்டில்கள் பறிமுதல், ஒருவர் கைது

60பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத்  உத்தரவுப்படி, பட்டுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன்  மேற்பார்வையில், சேதுபாவாசத்திரம் காவல் ஆய்வாளர் துரைராஜ் தலைமையில், உதவி ஆய்வாளர்கள் ராம்குமார், ரவீந்திரன் மற்றும் காவலர்கள், புதன்கிழமையன்று காந்தி ஜெயந்தியையொட்டி மதுக்கடைகளுக்கு விடுமுறையை முன்னிட்டு, சட்ட விரோதமாக மது விற்பனை நடக்கிறதா என  தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.  

அப்போது பள்ளத்தூர் கடைத் தெருவில் நின்ற  பண்ணைவயல் கிராமத்தைச் சேர்ந்த சற்குணம் என்பவரை சந்தேகத்தின் பேரில்  சோதனை செய்தபோது, அவரிடம் இருந்து 287 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதனை விற்பனை செய்வதற்காக கொடுத்த தில்லங்காட்டை சேர்ந்த  விவேக் என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி