ஆத்திக்கோட்டை ஊராட்சியில் மரக்கன்று நடும் விழா

71பார்த்தது
தமிழ்நாடு வனத்துறை, தஞ்சாவூர் வனக்கோட்டம், பட்டுக்கோட்டை வனச்சரகம் சார்பில், இரண்டாவது பசுமை தமிழக தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு உயிர் பன்மை பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்திற்கான பசுமையாக்கும் திட்டத்தின் கீழ், மரக்கன்று நடும் விழா இன்று நடைபெற்றது.  
மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி உத்தரவின் பேரில், பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆத்திக்கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் ஏ. எஸ். சந்திரசேகரன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் அமராவதி நித்தியானந்தம் முன்னிலை வகித்தார். வனவர் சிவசங்கர், வனக்காப்பாளர் மணவாளன், வேட்டைத் தடுப்பு காவலர்கள் 
சதீஷ் கண்ணா, ஆதவன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர், உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.  
ஊராட்சிக்கு சொந்தமான இடங்களில் 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. விவசாயிகள், சமூக, கல்வி நிறுவனங்களுக்கு, பேராவூரணி அருகே உள்ள செருவாவிடுதி நாற்றுப்பண்ணை மூலம் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படும்.  
இதற்கு விவசாயிகள் பட்டா, சிட்டா அடங்கல், ஆதார் அட்டை நகல், புகைப்படம் - 2 வழங்கி மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையம் அருகே உள்ள வனச்சரக அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.  
மேலும் 8838999827 (வனச்சரகர்), 9629961658 (வனவர்)  என்ற அலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி