தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே மனோரா கடற்கரை பகுதியில், பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டக் குழுமம் சார்பில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 2 ஆயிரம் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பங்கேற்ற ''தூய்மையே சேவை" என்ற தலைப்பில் தூய்மைப்பணி நடைபெற்றது.
மனோரா கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப்பணிக்கு புதுதில்லி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகத்தின் துணைச் செயலர் சஞ்சீவ் குமார் ஷேகல் தலைமை வகித்தார். தஞ்சை மருதுபாண்டியர் கல்லூரி தாளாளர் கொ. மருதுபாண்டியர் முன்னிலை வகித்தார்.
பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட குழும ஒருங்கிணைப்பாளர் ராமஜெயம் வரவேற்றார்.
தூய்மைப் பணியில்
தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டத்தைச் சார்ந்த 30 ககும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் 2 ஆயிரம் கலந்து கொண்டு தூய்மைப் பணி மேற்கொண்டனர்.
இதையொட்டி, கடற்கரை பகுதியில் சுமார் ஒரு டன் கழிவுகள் அகற்றப்பட்டன. தூய்மைப்பணியை மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கல்லூரி நாட்டு நல பணித்திட்ட அலுவலர் பிரபாகரன் ஒருங்கிணைத்தார். நேரு யுவகேந்திரா இணை இயக்குனர் திருநீலகண்டன் நன்றி கூறினார்.