தஞ்சை: தேசிய தன்னார்வ இரத்த தான முகாம்

54பார்த்தது
தஞ்சை: தேசிய தன்னார்வ இரத்த தான முகாம்
தேசிய தன்னார்வ இரத்த தான தினத்தை முன்னிட்டு இன்று 08.10. 2024 காலை தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இரத்த தானம் செய்யும் அமைப்புகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அரசு நிறுவனங்கள், பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள், கல்லூரிகள், தன்னார்வ அமைப்புகள் என மொத்தம் 99 தன்னார்வ அமைப்புகளில் கடந்த (2023-2024) ஓராண்டில் மட்டும் தஞ்சை மாவட்டத்தில் அதிகமாக இரத்தக்கொடை (583 யூனிட்) கொடுத்து தொடர்ந்து முதலிடம் வகிக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் நிர்வாகத்திற்கு பாராட்டி சான்றிதழ் மற்றும் கேடயத்தை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் ஹாஜா ஜியாவுதீன், மாவட்ட செயலாளர் ஆவணம் ரியாஸ், மாவட்ட துணைத் தலைவர் அஷ்ரப் அலி மற்றும் மாவட்ட மருத்துவரணிச் செயலாளர் முஸ்தபா உள்ளிட்டோர் கலந்து கொண்டு சான்றிதழை பெற்றுக்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி