தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே அம்மையாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் எம். சிவபாலன். இவர், பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்தியப் பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் நடத்தும் தேசிய அளவிலான கபாடி போட்டி, மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற உள்ளது. அதற்காக 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவிற்கான தமிழக அணிக்கான வீரர்கள் தேர்வு, திருவாரூர் மாவட்டம் வடுவூர் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் அக். 5 ஆம் தேதி நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாணவர் எம். சிவபாலன் தேர்வு செய்யப்பட்டு, தேசிய அளவிலான கபாடி போட்டியில், தமிழக அணி சார்பில் பங்கேற்று விளையாட உள்ளார்.