மக்களுடன் முதல்வர் முகாம்- பயனாளிக்கு தென்னங்கன்று வழங்கல்

72பார்த்தது
பேராவூரணி அருகே உள்ள திருச்சிற்றம்பலத்தில், மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் இன்று(ஆக.29) நடைபெற்றது. பேராவூரணி எம்எல்ஏ நா. அசோக்குமார் தலைமை வகித்து அரசுத் திட்டங்கள் குறித்து பேசினார். பட்டுக்கோட்டை வட்டாட்சியர் த. சுகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாமிநாதன், செல்வேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒன்றிய துணைப் பெருந்தலைவர் ஆல்பர்ட் குணாநிதி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் அ. மூர்த்தி, திமுக பேராவூரணி வடக்கு ஒன்றியச் செயலாளர் கோ. இளங்கோவன், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ. அப்துல் மஜீத், திமுக மருத்துவ அணி மாவட்ட அமைப்பாளர் டாக்டர் வி. சௌந்தர்ராஜன், திமுக நெசவாளர் அணி அமைப்பாளர் த. பன்னீர் செல்வம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மாலா போத்தியப்பன், அண்ணாதுரை, ஊராட்சி மன்றத் தலைவர்கள் எம். மோகன் (திருச்சிற்றம்பலம்), கற்புக்கரசி எழுவராஜன் (துறவிக்காடு), சுதாசினி சுப்பையன் (மடத்திக்காடு), விஜயராமன் (செருவாவிடுதி வடக்கு), ராமஜெயம் (செருவாவிடுதி தெற்கு), வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருள் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில், தோட்டக்கலைத்துறை சார்பில் பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகள், பலவகை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. மேலும், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய நூற்றுக்கணக்கான மனுக்களை, பொதுமக்கள் அரசு அலுவலர்களிடம் வழங்கினர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி