தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று(செப்.26) நடைபெற்ற நிகழ்ச்சியில் 26 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு, ரூபாய் 26 லட்சம் மதிப்பீட்டில் மூன்று சக்கர பெட்ரோல் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் வழங்கினார்.
நிகழ்ச்சியில் வட்டாட்சியர் தெய்வானை மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பயனாளிகள், பொதுமக்கள் கலந்து கலந்து கொண்டனர். தமிழகத்திலேயே சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நதியிலிருந்து இவ்வாறு அதிக அளவில் வழங்கப்படுவது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.