சேதுபாவாசத்திரம் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்

80பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, சேதுபாவாசத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செவ்வாய்க்கிழமை மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். திருவாரூர் மாவட்டத்தில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு, கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக, ராமநாதபுரம் நோக்கிச் சென்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சேதுபாவாசத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் முன்னறிவிப்பின்றி திடீரென உள்ளே சென்று ஆய்வு செய்தார்.  அப்போது பள்ளி மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினார். அவர்களிடம், "கல்வி ஒன்று தான் உயர்வுக்கு வழி. எனவே மாணவர்கள் இந்த வயதில் கல்வியில் அக்கறை செலுத்த வேண்டும்" என அறிவுறுத்தினார. மேலும் பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.  
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 234/ 77 என்ற திட்டத்தின் கீழ், தொகுதி சட்டமன்ற உறுப்பினர், அரசு அலுவலர்கள், கல்வித்துறை அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட எவருக்கும் தகவல் தெரிவிக்காமல் திடீரென சென்று ஆய்வு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
அந்த வகையில் சேதுபாவாசத்திரம் பகுதியில் 196 ஆவது ஆய்வை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.  
பள்ளி ஆசிரியர்களிடம் அவர் பேசியபோது, பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்திருக்குமாறு அறிவுறுத்தினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி