பேராவூரணி - Peravurani

தஞ்சாவூர்: ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் திடீர் தர்ணா

தஞ்சாவூர்: ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் திடீர் தர்ணா

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆக்கிரமிப்பு பிரச்சனை தொடர்பாக கிராம மக்கள் திங்கள்கிழமை திடீர் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர் நாள் கூட்டத்தில் பூதலூர் அருகேயுள்ள செய்யாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளிப்பதற்காக வந்தனர்.  அப்போது, ஆட்சியரக வளாகத்தில் திடீரென தரையில் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். செய்யாமங்கலம் கிராமத்தில் பொதுவான இடத்தைத் தனி நபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், இதற்கு உடந்தையாக செயல்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் வலியுறுத்தினர். அப்போது, அங்கிருந்த காவல் துறையினர் இவர்களை மாவட்ட ஆட்சியரிடம் அழைத்துச் சென்று மனு அளிக்க ஏற்பாடு செய்தனர். மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.  குடிநீர் பிரச்சனை: இதேபோல், காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு வடக்கு மாவட்டத் தலைவர் அருண் சுபாஷ் தலைமையில் மாரனேரி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அளித்த மனு: மாரனேரி கிராமத்தில் காலையில் 8 மணிக்கும், பிற்பகலில் 3 மணிக்கும் குடிநீர் திறந்துவிடப்படுகிறது. இதனால், தண்ணீர் பிடிக்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே, உரிய நடவடிக்கை எடுத்து காலை 6 மணிக்கும், மாலை 5 மணிக்கும் தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும், பழுதடைந்த பாலத்தை ஆய்வு செய்து மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా