பேராவூரணி அருகே ஆவணம் கடைவீதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டு, புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, இரண்டு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள ஆவணம் கடைவீதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த ரகசியத் தகவலின் பேரில், மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் உத்தரவின்படியும், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சித்ரா அறிவுறுத்தலின்படியும், பேராவூரணி வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன் தலைமையில், உதவியாளர்கள் ஜான், அடைக்கலராஜ் புதன்கிழமை(அக்,9) ஆவணம் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள ஒரு கடையில் திடீர் சோதனை நடத்தினர்.
அங்கு சுமார் 30 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கடைக்கு ரூ. 25 ஆயிரம் விதிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் மற்றொரு கடை என, 2 கடைகளும் தற்காலிகமாக 15 நாட்களுக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டது.