தஞ்சை: குண்டான சட்டி திரைப்பட இயக்குனருக்கு விருது
கும்பகோணம், கார்த்தி வித்யாலயா பன்னாட்டு பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி அகஸ்தி எழுதி இயக்கிய முழு நீளமான அனிமேஷன் படம் 'குண்டான் சட்டி' என்ற திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்திற்கு காந்தி உலக மையம் பார்வதி ஆச்சி நினைவாக 'மா' விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியானது சென்னையில் நடைபெற்றது. இத்திரைப்படம் மாணவ மாணவியர்களுக்கு நற்கருத்தினை எடுத்துரைக்கும் சிறந்த படமாகும். பெரியவர்களையும் , பெற்றோர்களையும் எவ்வாறு மதித்து நடக்க வேண்டும் என்பதனையும் வலியுறுத்தும் படமாகும். இத்திரைப்படம் மூலம் சிறுமி அகஸ்தி சாதனை புத்தகங்களிலும் , சர்வதேச விழாக்களிலும் பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை இயக்கியதால் சினிமா இயக்குனர் சங்கத்தில் சிறப்பு உறுப்பினராகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். மாற்று திறனாளி குழந்தைகளுக்கு நம்பிக்கை கொடுக்கும் இத்திரைப்படத்தை மாணவி அகஸ்தி ஆறு நாட்களில் எழுதி எட்டு மாதங்களில் முழு நீளமான அனிமேஷன் திரைப்படமாக உருவாக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.