சங்கரன்கோவில் - Sankarankovil

தென்காசி: தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு பேரணி

தென்காசி: தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு பேரணி

தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் சார்பாக தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. தென்காசி புதிய நீதிமன்ற வளாகத்தில் இருந்து தலைமை அஞ்சலக வரை நடைபெற்ற இப் பேரணியை மாவட்ட அரசு வழக்கறிஞர்கள் தொடங்கி வைத்தார்கள். இதில் தென்காசி உதவி மாவட்ட அலுவலர் சுரேஷ் ஆனந்த், தென்காசி நிலைய உதவி மாவட்ட அலுவலர் பிரதீப் குமார், தன்னால்வலர்கள், தென்காசி மாவட்ட அனைத்து நிலை கமாண்ட படை வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். நிகழ்வில் தென்காசி சிறப்பு நிலைய அலுவலர் கணேசன், ஜெயரத்தினகுமார் ஜெயபிரகாஷ் பாபு மற்றும் அனைத்து பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


தென்காசி