
தென்காசி: தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை பொதுமக்கள் அறிந்திடும் வகையில் சாதனை விளக்க சிறு புகைப்படக்கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.இந்த கண்காட்சியினை நேற்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ. கே. கமல்கிஷோர் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்களை பற்றி பொது மக்கள் அறிந்து கொண்டனர்.