தென்காசி: ஆய்க்குடி பேரூராட்சி தலைவர் அமைச்சரிடம் மனு

59பார்த்தது
தென்காசி: ஆய்க்குடி பேரூராட்சி தலைவர் அமைச்சரிடம் மனு
ஆய்க்குடி பேரூராட்சி மன்ற தலைவர் க. சுந்தர்ராஜன் தமிழக நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேருவை நேற்று சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: - தென்காசி மாவட்டம் ஆய்க்குடி பேரூராட்சியானது 15 வார்டுகளைக் கொண்ட வளர்ந்து வரும் தேர்வுநிலை பேரூராட்சி யாகும். இந்த பேரூராட்சியில் சுமார் 25, 000 மக்கள் வசித்து வருகின்றனர். இப்பேரூராட்சியில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் விவசாய தொழிலையே சார்ந்து வாழ்ந்து வருகின்றனர். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதால் வீடுகளும் போதுமானதாக இல்லை.

எனவே அனைவருக்கும் வீடுகள் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு 151 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. எனவே ஆய்க்குடி பேரூராட்சி பகுதியில் வசிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் விண்ணப்பித்துள்ள நபர்களுக்கு வீடு கட்டுவதற்கு விரிவான திட்ட கருத்துரு தயார் செய்து திருநெல்வேலி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப் பட்டுள்ளது.

எனவே ஆய்க்குடி பேரூராட்சியில் அனைவருக்கும் வீடுகள் திட்டம் 2024-25-இன் கீழ் 151 பயனாளிகளுக்கு 679. 50 இலட்சம் மதிப்பீட்டில் வீடுகள் கட்டுவதற்கான ஆணை வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி