தொடர் விடுமுறை காரணமாக தாம்பரம்- தென்காசி -கொச்சுவேலி இடையே குளிர்சாதன சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
1. வண்டி எண் 06035 தாம்பரம் - கொச்சுவேலிக்கு இயக்கப்படும் குளிர்சாதன சிறப்பு முறையில் 11. 10. 24 முதல் 27. 12. 24 வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமை யும் தாம்பரத்திலிருந்து இரவு 07. 30 க்கு புறப்பட்டு தென்காசி க்கு அதிகாலை 5. 28 க்கு வந்து கொச்சுவேலியை நண்பகல் 11: 30க்கு சென்றடையும்.
2. வண்டி எண் 06036 கொச்சுவேலி - தாம்பரம் இடையே இயக்கப்படும் குளிர்சாதன சிறப்பு ரயில் 13. 10. 24 முதல் 29. 12. 24 வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை யும் கொச்சுவேலியில் மாலை 03. 25 மணிக்கு புறப்பட்டு தென்காசிக்கு இரவு 08. 25 மணிக்கு வந்து தாம்பரத்தை மறுநாள் காலை 07. 35 மணிக்கு சென்றடையும்.
இந்த ரயிலில் 16 மூன்றடுக்கு எகனாமிக் குளிர்சாதன பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும்.
தென்காசி - தாம்பரம் ஒரு டிக்கெட் விலை ரூ. 1160.
செங்கல்பட்டு , மேல்மருவத் தூர் , விழுப்புரம் , விருத்தாச்சலம் , அரியலூர் , ஶ்ரீரங்கம் , திருச்சி , திண்டுக்கல், மதுரை, விருதுநகர் , சிவகாசி , ராஜபாளையம், சங்கரன் கோவில், பாம்பகோவில் சந்தை , கடையநல்லூர் , தென்காசி, செங்கோட்டை, தென்மலை, அவனீஸ்வரம், கொட்டரகர , குண்டாரா, கொல்லம் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயில்கள் ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்மஸ் விடுமுறை நாட்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.