சங்கரன்கோவில் சங்கரநாராயணர் சுவாமி திருக்கோவிலில் இன்று (அக்.,6) தமிழக ஆளுநர் ஆர். என். ரவி குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் இன்று நடைபெற்ற மது ஒழிப்பு மாபெரும் பொதுக்கூட்டத்தில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி கலந்து கொண்டார்.
முன்னதாக கவர்னர் ஆர். என். ரவி சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோமதி அம்பாள் திருக்கோவிலில் குடும்பத்தினருடன் சென்று வழிபட்டார். சங்கரலிங்க சுவாமி, சங்கரநாராயணர் சாமி , கோமதி அம்பாள் ஆகிய சன்னதிகளுக்குச் சென்று குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக ஆளுநர் ஆர். என். ரவிக்கு திருக்கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி சிறப்பான வரவேற்பு அளித்து திருக்கோவில் உள்ளே அழைத்துச் சென்றனர்.