தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நேற்று நடைபெற்ற மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் தமிழக கவர்னர் ஆர். என். ரவி கலந்து கொண்டார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் போதையில்லா தென்காசி மாவட்டத்தினை உருவாக்கும் வகையில் தனியார் தொண்டு நிறுவனமான வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் மற்றும் இராஜபாளையம் ரோட்டரி கிளப் சார்பில் நேற்று போதை ஒழிப்பு பேரணி நடைபெற்றது.
பேரணியானது சங்கரன் கோவில் பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கி முக்கிய சாலைகள் வழியாக சென்றது.
பேரணியில் ஷோகோ நிறுவனர் பத்மஸ்ரீ. ஸ்ரீதர் வேம்பு, மனிதநேயம் அறக்கட்டளை நிறுவனர் சைதை. துரைசாமி, வாய்ஸ் ஆப் பவுண்டேஷன் நிறுவனர் ஆனந்தன், ரோட்டரி கிளப் நிர்வாகிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசியல் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
பேரணி முடிவில் மது ஒழிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக கவர்னர் ஆர். என். ரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பள்ளி, மது ஒழிப்பு குறித்த கலை நிகழ்ச்சிகளை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் நடத்தினர்.