சங்கரன்கோவில் பகுதியில் மின்தடை

59பார்த்தது
சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளர் மா. பால சுப்ரமணியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

சங்கரன்கோவில், பெருமாள்பட்டி உபமின் நிலையத்தில் 05. 10. 2024 அன்று காலை 09. 00 மணி முதல் மதியம் 02. 00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால் அன்று சங்கரன் கோவில் நகர்பகுதி, என். ஜி. ஓ. காலனி, களப்பாகுளம், புளியம்பட்டி, வாடிக்கோட்டை, பெரியூர். மணலூர், பெரும்பத் தூர், இராமலிங்கபுரம், வடக்கு புதூர், நகரம், முள்ளிகுளம், சீவலராயனேந்தல், பெருங் கோட்டுர், அழகாபுரி ஆகிய ஊர்களுக்கும்,

பெருமாள்பட்டி, மாங்குடி, இனாம்கோவில்பட்டி, அருகன் குளம்புதூர், செந்தட்டியாபுரம். எட்டிச்சேரி, தென்மலை, அ. சுப்பிரமணியாபுரம், இடையான்குளம், முறம்பு, ஆசிலாபுரம். கூனங்குளம், பருவக்குடி, பந்தபுளி, பி. ரெட்டியாபட்டி, தெற்கு வெங்காநல்லுார், சோலைச்சேரி, வேலாயுதபுரம் ஊர்களுக்கும் மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

மேலும் பராமரிப்பு சமயத்தில் பொதுமக்கள் மின்வாரிய பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு நல்கிடவும் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது என செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி