இருசக்கர வாகனங்கள் வலம் வரும் இடமாக மாறிய ஆலயம்

56பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணன் சுவாமி ஆலயம் தென் மாவட்டங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த புனித ஸ்தலமாக கருதப்படுகின்றது. சமீபத்தில் தான் இந்த ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிலையில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் உட்பிரகாரத்துக்குள் வாகன ஓட்டிகள் இருசக்கர வாகனங்களில் வலம் வரும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் பக்தர்களுக்கு இடையூறாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மீதும் கோயில் அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.

தொடர்புடைய செய்தி