சிவகங்கை - Sivaganga

சிவகங்கை: சிறுபான்மையினர் நல ஆணையத்தலைவர் முக்கியத் தகவல்

தமிழக அரசின் திட்டங்கள் சிறுபான்மையினரிடம் போய்ச்சேர்வதில் என்ன தடை என்பது பற்றி ஆராய்ச்சி நடைபெறுவதாக தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தலைவர் சொ. ஜோஅருண் தெரிவித்தார். சிவகங்கை ஆட்சியரகப் பகுதியில் செய்தியார்களிடம் பேசுகையில்: அரசு சிறுபான்மையினருக்கு எந்த மாதிரியான திட்டங்களை வகுத்துள்ளது, நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள், அதனால் மக்களுக்கு கிடைத்துள்ள பயன் பற்றி தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் ஆய்வு நடத்த சிறுபான்மை ஆணையம் திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. சேலம், கரூர், நாமக்கல் மாவட்டங்களைத் தொடர்ந்து, டிச. 4, 5, 6 ஆகிய தேதிகளில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும், அதனைத்தொடர்ந்து இராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி உள்பட அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு நடத்தப்படவுள்ளது. இறுதியாக சென்னை மாவட்டத்தில் ஆய்வு நடத்தப்படும். சிறுபான்மையினருக்கான திட்டங்களின் தாக்கம், செயல்பாடு, முன்னேற்றம் குறித்தும் நலத்திட்டங்கள் சிறுபான்மையினரிடம் போய்ச்சேருவதில் என்ன தடை என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக தமிழக அரசு ரூ. 34 லட்சம் ஒதுக்கியுள்ளது. மாநிலம் முழுவதும் 6 ஆராய்ச்சி மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றை சமூக அறிவியல் அறிஞர்கள் 5 பேர் கொண்ட குழு ஆராய்ச்சி செய்கிறார்கள் என்றார்.

வீடியோஸ்


சிவகங்கை
Oct 14, 2024, 17:10 IST/திருப்பத்தூர்
திருப்பத்தூர்

சிவகங்கை: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 9 ஆண்டு சிறை

Oct 14, 2024, 17:10 IST
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கள்ளர்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமார் (30). இவர் கிராமத்திற்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் பள்ளிக்கு வந்த 9 வயது சிறுமியை கடந்த 2019 ஜூலை 9 ஆம் தேதி பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை ஆட்சியரகப் பகுதியில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி கோகுல் முருகன் விசாரித்தார். குற்றவாளி குமாருக்கு 9 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 3500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்க இன்று(அக்.14) உத்தரவிட்டார்.