சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் மையப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் நவராத்திரி பெருவிழா முன்னிட்டு அம்மன் ஸ்ரீ பாலாம்பிகை அம்மன் அலங்காரத்தில் அருள் பாலித்தார் முன்னதாக வேத பாராயணம் மற்றும் அம்மனின் மூல மந்திரங்கள் கூறி கோபுர தீபம் கும்ப தீபம் நாகதீபம் ஏக முக தீபம் சோடச உபசாரங்கள் நடைபெற்றன தொடர்ந்து உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்து மகா கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது பின்னர் கொழு தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜை நடைபெற்று தீப ஆராதனை காண்பித்தனர் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பத்திரகாளி அம்மனை வழிபட்டனர்