சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு 14. 3 சென்டிமீட்டர் கன மழை பெய்து ரெடிமேட் ஆடைகள் விற்பனை பஜாரில் மழைநீர் புகுந்து வியாபாரிகளை பெரும் பாதிப்பிற்குள்ளாக்கியது.
மேலும், கடந்த மூன்று நாட்களாக தினமும் விட்டு, விட்டு மிதமான மழையாகவும், தூறல் மழையாகவும் பெய்து வந்த நிலையில், இன்று இரவு ஏழு மணிக்கு மிதமான மழை பெய்ய தொடங்கி சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. பின்பு, தூறல் மழையாக பெய்து வந்ததால்,
மீண்டும் வியாபாரக்கடை பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கி, தீபாவளிக்காக பல லட்சம் ரூபாய் செலவழித்து கொள்முதல் செய்து வைத்திருந்த வியாபாரிகளை
கவலை அடைய செய்துள்ளது. இதே போல் சிவகங்கை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரமாக மழை பெய்து வருகிறது.