சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தாலுகாவுக்குட்பட்டது மானங்காத்தான் கிராமம் இங்கு சுமார் 150 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளதாகவும் விவசாயத்திற்கு நீர்வரத்து ஆதாரமாக நாட்டார் கால்வாய் திகழ்வதாகவும் தற்சமயம் நாட்டார் கால்வாய் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மானங்காத்தான் கண்மாய்க்கு தண்ணீர் வரும் கால்வாயினை பொது கால்வாயில் இணைத்துள்ள இடத்திலிருந்து கண்மாய் வரை மேட்டுப்பகுதியாக இருப்பதால் கண்மாய்க்கு தண்ணீர் வர வாய்ப்பு இல்லையெனவும் கண்மாய்க்கு தண்ணீர் வரும் கால்வாயினை கூடுதலாக 500 மீட்டர் தூர்வாரி பொது மதகு வரை இணைக்க வேண்டும் என ஆட்சியரக பகுதியில் ஆட்சியர் ஆஷா அஜித்திடம் அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.