சிவகங்கை - Sivaganga

சிவகங்கை: ஆளே இல்லாமல் இருக்கும் பேரிடர் மேலான்மை கட்டுப்பாட்டு அறை

சிவகங்கை ஆட்சியர் அலுவலக நுழை வாயிலிலேயே மாவட்ட பேரிடர் மேலான்மை கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. இந்த அறையானது பேரிடர் காலங்களில் பொது மக்கள் தொடர்பு கொண்டு உதவி கோரவும் அந்த உதவிகளை அரசின் சார்பில் நிறைவேற்றவும் உருவாக்கப்பட்டது. உதாரணமாக மழை வெள்ள காலத்தில் வீடுகள் இடிந்தாலோ அல்லது மழை வெள்ளத்தில் பொது மக்கள் யாரேனும் சிக்கினாலோ இலவசமாக 1077 என்கிற எண்ணிற்கு தொலைப்பேசி வழியாக அழைத்து உதவி கோரவும் பாதிக்கப்பட்டவர்களை மீட்கவோ , அவர்களுக்கு உதவவோ தீயனைப்புத்துறை, வருவாய்த்துறை, காவல்துறையினரை ஒருங்கினைத்து உதவவும் உருவாக்கப்பட்டது ஆகும். தற்சமயம் வானிலை ஆய்வு மையமானது வரும் 4 நாட்களுக்கு சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருப்பதுடன் நேற்று முதல் காரைக்குடி, திருப்புவணம், மானாமதுரை, சிவகங்கை, சிங்கம்புணரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வெள்ளம் புரண்டு வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தும், வீடுகள் இடிந்து சேதமுற்றும் பல்வேறு பாதிப்புகளை பொது மக்கள் சந்தித்து வருகின்றன. பாதிப்புகளில் சிக்கும் பொது மக்கள் அவசரகாலத்தில் அழைக்க உதவும் இந்த பேரிடர் மேலான்மை கட்டுப்பட்டு அறை இன்று ஆட்கள் யாரும் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுவதுடன் அவசர அழைப்புகளான 1077 ஏற்க கூட ஆள் இன்றி உள்ளது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

வீடியோஸ்


சிவகங்கை
Oct 13, 2024, 15:10 IST/திருப்பத்தூர்
திருப்பத்தூர்

சிவகங்கை மாவட்டம் முழுவதும் அதிகபட்சமாக 494. 20 மீட்டர் மழை பதிவு

Oct 13, 2024, 15:10 IST
கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, மானாமதுரை , சிவகங்கை, திருப்புவனம், மற்றும் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பிற்பகலுக்கு பின் மேகமூட்டம் காணப்பட்ட நிலையில், திடீரென கனமழை வெளுத்து வாங்கியது. சிவகங்கை பகுதியில் 55 மீட்டர் மழைப்பதிவும் மானாமதுரை பகுதியில் 20 மில்லி மீட்டரும் இளையான்குடி பகுதியில் 7மில்லி மீட்டர் மழைப்பதிவும்திருப்புவனம் பகுதியில் 139. 20 மில்லி மீட்டரும், திருப்பத்தூரில் 48. 40 மில்லி மீட்டரும், காரைக்குடியில் 26. 20மில்லி மீட்டர் மழைப்பதிவு தேவகோட்டை பகுதியில் 92. 60மில்லிமீட்டர் மழைப்பதிவும் காளையார் கோவில் பகுதியில் 30. 40 மில்லி மீட்டர் மழைப் பதிவும் சிங்கம்புணரி பகுதியில் 75. 40 மில்லி மீட்டரும்சராசரியாக மாவட்டம் முழுவதும் 54. 91மில்லி மீட்டர் மழை பதிவும் அதிகபட்சமாக 494. 20 மில்லிமீட்டர் மழை பதிவும் பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் இன்று இரவு சுமார் 8 மணி அளவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.