சிவகங்கை: நெடுஞ்சாலைத்துறை காலிப்பணியிடங்களை நிரப்ப தீர்மானம்

83பார்த்தது
சிவகங்கை: நெடுஞ்சாலைத்துறை காலிப்பணியிடங்களை நிரப்ப தீர்மானம்
சிவகங்கை சத்தியமூர்த்தி தெருவில் உள்ள அரசு ஊழியர் சங்கு கட்டிடத்தில் சாலை ஆய்வாளர்கள் சங்க கூட்டம் இன்று மாலை சுமார் 5 மணி வரை நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மதிவாணன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் நெடுஞ்சாலை துறையின் சாலைகளை தனியாரிடம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும், நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அமைப்பதை கைவிட வேண்டும், நெடுஞ்சாலைத்துறை காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

மழைக்காலங்களில் பணிபுரிய மலைக்கோட் வழங்க வேண்டும், சாலை ஆய்வாளர்களுக்கு சைக்கிள் படி மிகவும் குறைவாக உள்ளது அதனை உயர்த்தி தர பரிந்துரை செய்ய செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் இக்னேசியஸ் முன்னாள் மாவட்ட செயலாளர் லோகநாதன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி