சிவகங்கை - Sivaganga

சிவகங்கை: முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பரபரப்பு பேச்சு

சிவகங்கை அரண்மனை வாசல் எதிரே அதிமுகவின் 53 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு பேசினார். தமிழகத்தில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டால் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளதாகவும், திருச்சி வந்த நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ இதுதான் திருச்சி மக்களை சந்திக்கும் கடைசி சந்திப்பு என கூறிவிட்டதாகவும், கோரிக்கைகளை மனுக்களாகவும் வாட்ஸ் அப்பிலும் அனுப்புமாறு கூறிவிட்டதாகவும். நாடாளுமன்ற உறுப்பினர்களை வாக்களித்த மக்கள் சந்திக்க முடியவில்லை என்றார். பாட்ஷா படத்தில் ஒரு பாடலில் பணக்காரர் ஆகி விடுவது போல, எங்களைப் போல ஒருவர் எம்எல்ஏ ஆனவர், பிறகு அமைச்சராகி, துணை முதல்வரும் ஆகிவிட்டதாக உதயநிதி ஸ்டாலினை விமர்சித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர்: தமிழகத்தில் மருந்துகளும், மாத்திரைக்கும் தட்டுப்பாடு நிலவு தாக குற்றச்சாட்டு கூறினார். மேலும், மக்களைத் தேடி மருத்துவம் என இந்த அரசு தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டாலும், மருத்துவமனையை தேடி வரும் நோயாளிகளிடத்தில் இந்த அரசு முதல் கவனத்தை செலுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தவர், சுகாதாரத்துறை அமைச்சர் வேகமாக நடந்தால் பத்தாது சுகாதாரத்துறை வேகமாக நடக்க வேண்டும் என விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

வீடியோஸ்


சிவகங்கை