தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள், இயன்முறை மருத்துவர்கள், கணக்கு மற்றும் தணிக்கை மேலாளர்கள், கணக்காளர்கள், கணினி வகைப்படுத்துநர்கள், கணினி விவரப் பதிவாளர்கள், அலுவலக உதவியாளர்கள், பகல் நேரப் பாதுகாப்பு மையப் பணியாளர்கள், மற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் ஆகிய அனைவருக்கும் செப்டம்பர் 2024 மாத ஊதியம் வழங்காததை கண்டித்து
மாநில அரசு போர்க்கால அடிப்படையில் முதலமைச்சரின் சிறப்பு நிதியிலிருந்து ரூபாய் 25 கோடியை உடனடியாக விடுவித்திட வேண்டும். மாநில அரசு தன் பங்களிப்பாக வழங்க வேண்டிய 40% நிதியினை உடனடியாக விடுவித்திட வேண்டும்.
மத்திய அரசு 2024-25 ஆம் ஆண்டில் முதல் தவணையாக வழங்க வேண்டிய ரூபாய் 573 கோடியை உடனடியாக விடுவிக்க கோரி ஆட்சியரகம் சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்புஇன்று மாலை சுமார் ஆறு மணி வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.