புதிய கட்டிடம் கட்டும் பணிக்கு ஆட்சியரக பகுதியில் எதிர்ப்பு

60பார்த்தது
சிவகங்கை ஆட்சியர் அலுவலக பகுதியில் மாவட்ட ஊராட்சி அலுவலகம் மற்றும் மாவட்ட திட்ட அலுவலகம்செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் இந்தஅலுவலகத்திற்குபுதிய கட்டிடம் கட்ட மாவட்டகவுன்சில் கூட்டத்தின் மூலம் இடம் தேர்வு செய்துதீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. இங்கு மாவட்ட கவுன்சிலர்களில் மொத்தம் 16பேர் உள்ள நிலையில் திமுகசார்பில் 5 கவுன்சிலர்களும் அதன்கூட்டனியான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2கவுன்சிலர்களும் அப்பொதைய மற்றோரு கூட்டனிகட்சியான ஐ. ஜே. கே 1 கவுன்சிலரும் என 8 பேர் திமுக கூட்டனியிலும் அதிமுகசார்பில் 8 கவுன்சிலர்களும் பிடித்து சம நிலையில் இருந்த நிலையில் இறுதியில்குளுக்கல் முறையில் தேர்ந்தெடுத்ததில் அதிமுகவை சேர்ந்த பொன்மணி பாஸ்கர்என்பவரே சேர்மனாக தேர்வானார். மாவட்ட கவுன்சிலில் எந்த ஒரு நல திட்டங்களை செயல்படுத்துவதாக இருந்தாலும் அதற்கு திமுகவை சேர்ந்த கவுன்சிலர்கள் முட்டுக்கட்டை போடுவதையே வாடிக்கையாக கொண்டனர். இன்று மாவட்ட கவுன்சில் கூட்டம் தலைவர் பொன்மணி பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற நிலையில் புதிய அலுவலகம் கட்டுவதற்கான தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்ட நிலையில் திமுக கவுன்சிலர்களில் சிலர் வரவில்லை எனவும் அதனை நிறைவேற்றக்கூடாது என காட்டாம்பூர் பகுதியை சேர்ந்த இரண்டாவது வார்டு திமுக கவுன்சிலர் ரவி எதிர்ப்பு தெரிவித்தார் இதனை அடுத்து அந்த தீர்மானம் நிறைவேற்றாமல் கூட்டம் நிறைவடைந்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி