மானாமதுரையில் 4 நபர்கள் மீது வழக்கு
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதிகளில் உள்ள சில கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலை அடுத்து டி.எஸ்.பி., நிரேஷ் தலைமையில் போலீசார் நேற்று மானாமதுரை மற்றும் பல்வேறு கடைகளில் சோதனை நடத்தி புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.