சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் யூனியனின் கூட்டம் தலைவர் லதா அண்ணாதுரை தலைமையில் இன்று (நவம்பர் 13) நடைபெற்றது. கடந்த 5 ஆண்டுகளாக கீழப்பசலை உள்ள பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட தொடர் கோரிக்கை விடுத்தும் இதுவரை நடக்கவில்லை எனக் கூறப்பட்டது. மேலும் மானாமதுரை நகராட்சிக்கு உட்பட்ட 10 லட்சம் லிட்டர் நீர்நிலை மேல்நிலைத் தொட்டியை யூனியன் அலுவலக பகுதியில் கொண்டு வந்து கட்டுவதற்கு ஒட்டுமொத்தமாக ஒன்றிய கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.