தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை கடந்த மாதம் நிரம்பியதை தொடர்ந்து சுமார் 3500 கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வைகை ஆற்றில் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த தண்ணீர் மானாமதுரை வந்தடைந்த நிலையில் மானாமதுரை நகர பகுதிகளில் வாரச்சந்தை எதிர்ப்புறம் உள்ளே வைகை ஆற்றுப்பகுதியில் அதிகளவில் நாணல் செடிகளும், கருவேல மரங்களும் தண்ணீரை மறைக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளதால் நீரோட்டம் பாதிக்கப்படுகின்றது. இதனால்
கால்வாய் வழியாக கண்மாய்களுக்கு தண்ணீர் வருவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வைகை ஆற்றில தண்ணீர் வந்தும் பல ஆயிரம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே பொதுப்பணித்துறையினர் வைகை ஆற்றில் வளர்ந்துள்ள கருவேல மரங்களையும், நாணல் செடிகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.