சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ராஜகம்பீரம் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான கலைத் திருவிழா இன்று மாலை சுமார் 5 மணியளவில் நடைபெற்றது இந்த விழாவில் மானாமதுரை சுற்றியுள்ள 45 பள்ளிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு வேடம் அணிந்து கும்மி பாட்டு, ஒயிலாட்டம் மற்றும் விவசாய பொருட்களை வைத்து மாணவிகள் நடனம் ஆடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி உட்பட பல்வேறு பொதுமக்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளின் கலைத்திறனை கைதட்டி உற்ச்சாகமாக கண்டு ரசித்தனர்.