சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் சமேத ஸ்ரீ சசிவர்னேஸ்வரர் திருக்கோவிலில் கந்த சஷ்டி விழாவின் ஒரு நிகழ்வாக முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது இக்கோவிலில் தனி சன்னதி கொண்டு முருகப் பெருமான் வள்ளி தெய்வானை தாயார் உடன் நின்ற நிலையில் அருள் பாலிக்கிறார் கந்த சஷ்டி விழாவின் ஒரு நிகழ்வாக முருகப்பெருமானுக்கு திருமஞ்சன பொடி மஞ்சள் பால் தயிர் இளநீர் சந்தனம் பன்னீர் உள்ளிட்ட பலவகையான நறுமண திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள நடைபெற்றன தொடர்ந்து சிறப்பு அலங்காரம் நடைபெற்று கோபுர தீபம் கும்ப தீபம் நாகதீபம் காண்பித்து உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்யப்பட்டன நிறைவாக ஏழுமுக தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை வழிபட்டனர்.