சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஓ. வெ. செ பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு சட்டம் சார்ந்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.. இந்நிகழ்வில் சிவகங்கை மாவட்ட சார்பு நீதிபதியும் மற்றும் சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலாளர் சுப்பையா கலந்து கொண்டு போதைப்பொருள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசினார். போக்சோ சட்டம் குறித்தும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் சிறப்புரை வழங்கினார். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதெல்லாம் அந்த காலம் என்றும் தற்போது சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும், தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் வழக்குகள் துரிதமாக நடைபெறும் வேண்டும் என்ற கோணத்தில் உச்ச நீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் செயல்பட்டு வருகிறது என இன்று மதியம் சுமார் மூன்று மணி அளவில் தெரிவித்தார்