இந்திய பங்குச் சந்தை கடந்த வாரம் முழுவதுமே சரிவில் இருந்த நிலையில், இன்று மீண்டும் சரிவில் தொடங்கி இருப்பது முதலீட்டாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 205 புள்ளிகள் குறைந்து 77,375 ஆகவும், நிப்டி 60 புள்ளிகள் குறைந்து 23,473 ஆகவும் உள்ளது. ஆக்ஸிஸ் வங்கி, பாரதி ஏர்டெல், ஹிந்துஸ்தான் லீவர், இண்டஸ் இன்ட் வங்கி, இன்போசிஸ், ஐடிசி, கோடக் வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.