இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி சாய்ரா ரஹ்மான் தனது கணவரை பிரிவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து சைராவின் வழக்கறிஞர் வந்தனா ஷா, வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், “திருமணமாகி பல வருடங்களுக்குப் பிறகு, திருமதி சாய்ரா தனது கணவர் திரு. ஏ.ஆர்.ரஹ்மானிடமிருந்து பிரிந்து செல்லும் கடினமான முடிவை எடுத்துள்ளார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 29 வருட திருமண வாழ்வு முடிவுக்கு வர உள்ளது.