'ரயில்வே ஊழியர் உடல் நசுங்கி பலி' - ராகுல் கண்டனம்
பீகார் பரோனி ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளை இணைக்கும் பணியின்போது ரயில்வே ஊழியர் உடல் நசுங்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். “ரயில்வே துறையில் போதிய ஆட்சேர்ப்பு நடக்காததே விபத்துகளுக்கு காரணம். மோடி அவர்களே, நீங்கள் அதானியை மட்டும் பாதுகாப்பாக வைத்திருக்க முயற்சிக்கிறீர்கள், ரயில்வேயின் நீண்ட கால அலட்சியம், புறக்கணிப்பு ஆகியவற்றின் விளைவுதான் இந்த விபத்து” என தெரிவித்துள்ளார்.