ராமேஸ்வரத்தில் இருந்து 12க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அவர்கள் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்துள்ளனர். மேலும், அவர்களது விசைப்படகுகளையும் சிறை பிடித்துச் சென்றுள்ளனர். தொடர்ந்து, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து வருகின்றனர். இதுகுறித்து மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பலமுறை கடிதம் அனுப்பியும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப்படுகிறது.