சென்னை வளசரவாக்கம் போலீசில் இளம்பெண் ஒருவர், தனது நிர்வாண வீடியோவை வைத்து இன்ஸ்டாகிராம் நண்பர் மிரட்டுவதாக புகார் அளித்துள்ளார். விசாரணையில் கன்னியாகுமரியை சேர்ந்த இளைஞருடன் அடிக்கடி வீடியோகாலில் பேசி வந்துள்ளார். அந்த இளைஞர் தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்வேன் என மிரட்டி இரண்டு முறை நிர்வாணமாக வீடியோகாலில் பேச வைத்துள்ளார். பின்னர் அந்த இளைஞர் வீடியோவை வைத்து பணம் கேட்டு மிரட்டி ரூ.5 லட்சம் வரையில் பெற்று மீண்டும் மிரட்டுவதாக புகாரில் தெரிவித்துள்ளார்.