சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதியில் குட்கா ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் சட்டவிரோதமாக பதுக்கி விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆத்தூர் பேருந்து நிலைய பகுதிக்கு ஆத்தூர் டிஎஸ்பி சதீஷ்குமாருக்கு தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரண்டு
இருசக்கர வாகனத்தில் வெள்ளை நிற மூட்டையுடன் வந்த இரண்டு நபர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் மூட்டையில் ஹான்ஸ், , விமல் பாக்கு உள்ளிட்ட போதை பொருட்கள் மூட்டை வாகனத்தில் எடுத்து வந்த்து தெரியவந்தது இதனை அடுத்து தீவிர சோதனையில் ஈடுபட்ட போது அதே பகுதியில் ஆம்னி காரிலும் மூட்டை மூட்டையாக ஹான்ஸ், கூல் லிப், விமல் பாக்கு பாக்கெட்டுகள் 40 கிலோ இருந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில்
சம்பத் மகன் கோவர்தனன் ( 50) பாம்பாட்டி நாயக்கர் தெரு மற்றும்
குமார் மகன்
யோகபிரகாஷ் ( 24)
கல்லாநத்தம்,
பெரியசாமி மகன் ரத்தினகுமார் (47) தென்னங்குடி பாளையம்
என்பதும் தெரிய வந்தது.
மேலும் இரண்டு இருசக்கர வாகனம், ஒரு ஆம்னி கார் உள்ளிட்ட வாகனங்களையும், பறிமுதல் செய்தனர். மூன்று பேரையும் போலீசார் கைது செய்து ஆத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஆத்தூர் மாவட்ட சிறையில் அடைத்தனர்.