மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு 8 ஆயிரம் கனஅடியாக குறைப்பு

73பார்த்தது
மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு 8 ஆயிரம் கனஅடியாக குறைப்பு
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.

தற்போது பாசன பகுதிகளில் தண்ணீர் தேவை குறைந்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு நேற்று காலை முதல் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது. கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 600 கனஅடி வீதம் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் வினாடிக்கு 9 ஆயிரத்து 433 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று வினாடிக்கு 9 ஆயிரத்து 144 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் அளவு குறைக்கப்பட்டதாலும், நீர்வரத்து குறைந்ததாலும் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 106. 60 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று 106. 56 அடியாக குறைந்தது.

தொடர்புடைய செய்தி