தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் டெல்லி கணேஷ் (81) உடல்நலக்குறைவு காரணமாக நேற்றிரவு காலமானார்.
1944ல் நெல்லையில் பிறந்த இவர், 1976ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான பட்டினப்பிரவேசம் படம் மூலம் அறிமுகமானார். பொல்லாதவன், ஹே ராம், தவசி, காவலன், அயன், பாபநாசம் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கு, இந்தியிலும் நடித்துள்ளார். காமெடி, வில்லன், குணச்சித்திரம் என பன்முகத்திறமை கொண்ட இந்த மகா கலைஞனின் மறைவு தமிழ் சினிமாவுக்கு பேரிழப்புதான்.