கனடா செல்ல அனுமதிக்காததால் தாயை மகன் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 6ஆம் தேதி மாலை டெல்லியின் மொலார்பந்த் கிராமத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. வேலைக்காக கனடா செல்ல அனுமதிக்காத தாயை மகன் கிருஷ்ண காந்த் (31) என்பவர் கத்தியால் சரமாரியாக குத்திக் கொன்றுள்ளார். குற்றவாளியை கைது செய்த போலீசார், இவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்று கூறியுள்ளனர்.