ஏத்தாப்பூர்முத்துமலை முருகன் திருக்கல்யாணம், தங்க திருத்தேர்

81பார்த்தது
சேலம் மாவட்டம் வாழப்பாடி யில் ஏத்தாப்பூரில் அமைந்துள்ள உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை 146 அடியில் அமைந்துள்ளது. மூன்றாம் ஆண்டு கந்த சஷ்டி விழா சூரசம்கார நிகழ்வு நடைபெற்று முடிந்த நிலையில்
இன்று ஆலய மண்டபத்தில் திருக்கல்யாண நிகழ்ச்சி மற்றும் தங்க திருத்தேர் விழா நடைபெற்றது.
உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத முத்துமலை முருகன் சுவாமிக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்ற அதன் தொடர்ச்சியாக ஆலய மண்டபத்தில் திருமண கோலத்தில் சுவாமியை பக்தர்களுக்கு காட்சியளித்தார்
தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க மாப்பிள்ளை சீர்வரிசை நடைபெற்று சிறப்பு யாக பூஜை செய து வள்ளி, தெய்வானை மற்றும் முத்துமலை முருகனுக்கு கங்கணம் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்று தொடர்ச்சியாக சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
வள்ளி, தெய்வானை மற்றும் முத்துமலை முருகனுக்கு பால்பழம் கொடுக்கும் நிகழ்வு, தொடர்ந்து மாலை மாற்றும் நிகழ்வும் நடைபெற்று முடிந்த நிலையில் மஹா தீபாராதனை நடைபெற்றது. கோவில் வளாகத்தில் அமைந்துள்ள மண்டபத்திலிருந்து முத்துமலை முருகன் சுவாமி தங்க திருத்தேர் விழா விமர்சையாக நடைபெற்றது. இந்த தங்கதிருத்தேர் மேளதாளம் முழங்க வானவேடிக்கை உடன் கோவில் வளாகப் பகுதிகளில் முத்துமலை முருகனுக்கு அரோகரா என்ற கோஷத்துடன் தங்கத்தேர் இழுத்து பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி