வங்கக்கடலில் இன்று (நவ., 10) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது அடுத்த இரு தினங்களில் மேற்கு திசையில் நகர்ந்து, தமிழக, இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும். இதன் காரணமாக அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது. இன்று தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, காரைக்காலில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.