சேலம்: கரபுரநாதர் கோயில் புதிய கொடிக்கம்பம் பிரதிஷ்டை
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோயில் திருப்பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று (நவம்பர் 14) காலை கோயிலுக்கு பிரத்தியேகமாக 15 அடி உயரத்தில் தேக்கு மரத்திலான கொடி மரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த பிரதிஷ்டை விழாவில் கோவில் திருப்பணி குழு முக்கிய நிர்வாகிகளும் மற்றும் பக்தர்களும் கலந்து கொண்டனர். கொடிமர கம்பத்திற்கு சிறப்பு பூஜைகளுடன் கம்பம் பிரதிஷ்டை செய்து நிறுவப்பட்டது.