சேலம்: இந்தியன் வங்கி சார்பில் விவசாய கடன் முகாம்
சேலம் மண்டல இந்தியன் வங்கி சார்பில் வேளாண்மை கடன் முகாம் சேலம் சிவராஜ் ஓட்டலில் நடந்தது. இதில், சென்னை இந்தியன் வங்கியின் கார்ப்பரேட் அலுவலக பொதுமேலாளர் சந்திரசேகரன், கோவை கள பொது மேலாளர் ஸ்ரீமதி போச்சலா சுதா ராணி ஆகியோர் தலைமை தாங்கினர். இந்த முகாமில் இந்தியன் வங்கியின் பல்வேறு கிளைகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முகாமில், 412 சுயஉதவி குழுக்கள், லக்பதி தீதி திட்டத்தின் கீழ் 100 பெண் தொழில் முனைவோர், 3 பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் விவசாயம், முதலீட்டு நடவடிக்கைகளுக்கு ரூ. 40.44 கோடி கடன் அனுமதி வழங்கப்பட்டது. முடிவில், இதற்கான அனுமதியை வங்கி அதிகாரிகள் சந்திரசேகரன், ஸ்ரீமதி போச்சலா சுதா ராணி ஆகியோர் பயனாளிகளுக்கு வழங்கினர்.நிகழ்ச்சியில், சேலம் இந்தியன் வங்கி மண்டல மேலாளர் ராஜ்குமார், துணை மண்டல மேலாளர் ரூபக் குமார் கேஷ்ரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.